தங்கக்கட்டிகள் விற்கும் கடைகளில் அதிகாரிகள் திடீர் சோதனை

தங்கக்கட்டிகள் விற்கும் கடைகளில் அதிகாரிகள் திடீர் சோதனை
கோவை
ஜி.எஸ்.டி. செலுத்துவதில் முறைகேடு நடந்து உள்ளதா என்று கோவையில் தங்கக்கட்டிகள் விற்பனை செய்யும் கடைகளில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
தங்கக்கட்டிகள் விற்பனை
தொழில் நகரான கோவையில் பொன்னையராஜபுரம், சலீவன் வீதி, ராஜவீதி, செல்வபுரம் மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் ஏராள மான நகைப்பட்டறைகள் உள்ளன. இங்கு வடமாநில தொழிலாளர் கள் உள்பட ஏராளமானோர் வேலை செய்து வருகிறார்கள்.
இதுதவிர வைசியாள் வீதி, ராஜவீதி, பெரியகடை வீதி, ஒப்பணக் கார வீதி மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் தங்கக்கட்டிகள் விற்பனைய செய்யும் கடைகள் உள்ளன. அங்கு நகைக்கடை வியாபாரிகள் தங்கக்கட்டிகளை வாங்கி, அதை பட்டறையில் கொடுத்த நகை செய்து வருகிறார்கள்.
அதிகாரிகள் திடீர் சோதனை
இந்த நிலையில் கோவை வைசியாள் வீதிக்கு வந்த 5-க்கும் மேற் பட்ட ஜி.எஸ்.டி. அதிகாரிகள் தங்கக்கட்டிகள் விற்பனை செய்யும் கடைகளில் திடீரென்று சோதனை நடத்தினர். இதையடுத்து அவர்கள் ராஜவீதி, பெரியகடை வீதி மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் இருக்கும் தங்கக்கட்டி விற்கும் கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது தங்கக்கட்டி விற்கும் கடைகளில் ஜி.எஸ்.டி. செலுத்து வதில் முறைகேடு நடந்து உள்ளதா?, அவர்களின் வருமானம் எவ்வளவு? முறையாக வருமான வரி தாக்கல் செய்யப்பட்டு உள்ளதா? என்று ஆய்வு செய்தனர்.
ஆவணங்களை சரிபார்த்தனர்
மேலும் ஜி.எஸ்.டி. செலுத்தியதற்கான ஆவணங்களை வாங்கி சரி பார்த்தனர். நேற்று காலை 9 மணிக்கு தொடங்கிய சோதனை மாலை வரை நீடித்தது.
இது குறித்து தங்க கட்டிகள் விற்பனை செய்து வரும் வியாபாரிகள் கூறும் போது, தங்கக்கட்டிகள் விற்கும் கடைகளில் ஜி.எஸ்.டி. அதிகாரிகள் சோதனை நடத்துவது வழக்கமானதுதான். கடைகளில் இருந்து ஜி.எஸ்.டி. முறையாக செலுத்தப்பட்டு உள்ளதா என்று ஆவணங்களை சரிபார்த்து ஆய்வு செய்தனர் என்றனர்.