குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்த அதிகாரிகள்


குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்த அதிகாரிகள்
x

குடிநீர் குழாய் உடைப்பை அதிகாரிகள் சரி செய்தனர்.

கரூர்

பள்ளப்பட்டி நகராட்சி பகுதிகளுக்கு ராஜபுரம் அமராவதி ஆற்றில் இருந்து தனிக்கிணறு அமைத்து மின் மோட்டார் மூலம் நீர் உறிஞ்சப்பட்டு பள்ளப்பட்டி நகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அது மட்டுமில்லாமல் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலமாகவும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அரவக்குறிச்சி வழியாக பள்ளப்பட்டிக்கு செல்லும் அரவக்குறிச்சி பகுதியில் அமராவதி குடிநீர் திட்ட குழாயில் பழுதடைந்து உடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து பள்ளப்பட்டி நகராட்சி தலைவர் முனவர்ஜான் ஆலோசனையின்படி பள்ளப்பட்டி நகராட்சி ஆணையர் கோபாலகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் குறிப்பிட்ட இடத்தை நேரில் பார்வையிட்டனர். பின்னர் பழுதடைந்த குடிநீர் குழாயை சரிசெய்தனர். இதையடுத்து உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளை அப்பகுதி பொதுமக்கள் பாராட்டினர்.


Next Story