வல்லம் வேளாண்மை அலுவலகத்தில் அதிகாரிகள் திடீர் ஆய்வு


வல்லம் வேளாண்மை அலுவலகத்தில் அதிகாரிகள் திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 31 Dec 2022 12:15 AM IST (Updated: 31 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

வல்லம் வேளாண்மை அலுவலகத்தில் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

விழுப்புரம்

செஞ்சி,

தமிழக வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர் சமயமூர்த்தி, வேளாண்மை இயக்குனர் அண்ணாதுரை ஆகியோர் வல்லம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அவர்கள், வேளாண் விரிவாக்கம் மையத்தில் வைக்கப்பட்டிருந்த இடுபொருட்களின் இருப்பை சரிபார்த்ததோடு, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்திற்கு வரப்பெற்ற இடுபொருட்களான ஜிங்சல்பேட், ஜிப்சம் மற்றும் வேளாண் உபகரணங்களை விவசாயிகளுக்கு விரைந்து வழங்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினர். ஆய்வின் போது வேளாண்மை துணை இயக்குனர்கள் சண்முகம், செல்வபாண்டியன், மகாலட்சுமி, சுரேஷ், ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story