சின்னசேலம் அருகேசாலை விபத்தில் ஆயில் மில் உரிமையாளர் பலி


சின்னசேலம் அருகேசாலை விபத்தில் ஆயில் மில் உரிமையாளர் பலி
x
தினத்தந்தி 19 Aug 2023 12:15 AM IST (Updated: 19 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சின்னசேலம் அருகே சாலை விபத்தில் ஆயில் மில் உரிமையாளர் பலியானாா்.

கள்ளக்குறிச்சி


சின்னசேலம்,

சேலம் மாவட்டம், தலைவாசல் அடுத்த கோவிந்தம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி மகன் ரமேஷ் (வயது 42). இவர் வீரகனூர் சந்தைப்பேட்டை பகுதியில் ஆயில் மில் வைத்துள்ளார். ஆயில் மில் அரவைக்கு தேவையான மணிலா பயிர் வாங்குவதற்காக நேற்று தியாகதுருகத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, கூகையூர்-சின்னசேலம் சாலையில் குரால் கிராம ஏரி கரையில் சென்ற போது, நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் விழுந்தார். இதில் படுகாயமடைந்த ரமேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து அவரது மனைவி காயத்ரி (35) கொடுத்த புகாரின் பேரில் கீழ்குப்பம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மியாடிட் மனோ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story