பனையேறும் தொழிலாளர்கள் 2-வது நாளாக உண்ணாவிரதம்


பனையேறும் தொழிலாளர்கள் 2-வது நாளாக உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 29 May 2023 12:15 AM IST (Updated: 29 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விக்கிரவாண்டி அருகே பனையேறும் தொழிலாளர்கள் 2-வது நாளாக உண்ணாவிரதம்

விழுப்புரம்

விக்கிரவாண்டி

தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் தலைவர் பாண்டியன் தலைமையில் விக்கிரவாண்டி ஒன்றியம் வேம்பி மதுரா பூரி குடிசை கிராமத்தில் பனை மரம் ஏறும் தொழிலாளர்கள் குடும்பத்துடன் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். கள் இறக்கவும், விற்கவும் அனுமதி வழங்க வேண்டும், பனைமரம் ஏறும் தொழிலாளர்கள் மீது கள்ளச்சாராய வழக்கு போடுவதையும், பெண்களை இழிவாக பேசிடும் கஞ்சனூர் போலீஸ் இன்ஸ்பெக்டரை கண்டித்தும் நடைபெற்று வரும் இந்த போராட்டத்தை கைவிடக்கோரி அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து நேற்று 2-வது நாளாக போராட்டம் நீடித்தது.


Next Story