கஞ்சா விற்ற மூதாட்டி கைது


கஞ்சா விற்ற மூதாட்டி கைது
x

தேனி வாரச்சந்தை பகுதியில் கஞ்சா விற்ற மூதாட்டியை போலீசார் கைது செய்தனர்.

தேனி

தேனி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி தலைமையில் போலீசார் தேனி வாரச்சந்தை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டு இருந்த மூதாட்டியிடம் விசாரணை நடத்தினர். அவர் வைத்திருந்த பையை சோதனை செய்த போது அதில் 100 கிராம் கஞ்சா இருந்தது. விசாரணையில் அவர் தேனி மின்வாரிய அலுவலகம் தெருவை சேர்ந்த நாகராஜ் மனைவி ராணி (வயது 60) என்பதும், கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்த கஞ்சா மற்றும் கஞ்சா விற்பனை மூலம் கிடைத்த ரூ.27 ஆயிரத்து 400 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து தேனி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதன்பேரில் தேனி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்து ராணியை கைது செய்தார். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story