சாராயம் விற்ற மூதாட்டி கைது
சாராயம் விற்ற மூதாட்டி கைது செய்யப்பட்டார்.
திருவண்ணாமலை
கண்ணமங்கலம்
சாராயம் விற்ற மூதாட்டி கைது செய்யப்பட்டார்.
கண்ணமங்கலம் அருகே உள்ள ரகிமான்பேட்டை பகுதியில் வசிப்பவர் தேவகி (வயது 82). இவர் தனது வீட்டின் பின்புறம் சாராய பாக்கெட்டுகளை பதுக்கி வைத்திருப்பதை அறிந்த கண்ணமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தரணி அங்கு விரைந்து சென்றார். அங்கிருந்த சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த அவர் மூதாட்டி தேவகியை கைது செய்து சாராயத்தை அழித்தார்.
கண்ணமங்கலம் பஸ் நிலையத்தில், நேற்று முன்தினம் அம்பேத்கர் நகரை சேர்ந்த மோகன்ராஜ் (25) போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையூறு செய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அந்த வழியாக ரோந்து சென்ற கண்ணமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தரணி அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
Related Tags :
Next Story