மூதாட்டி தூக்குப்போட்டு தற்கொலை


மூதாட்டி தூக்குப்போட்டு தற்கொலை
x

வந்தவாசி அருகே மூதாட்டி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருவண்ணாமலை

வந்தவாசி

வந்தவாசி அருகே மூதாட்டி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த வேனாந்தல் கிராமத்தைச் சேர்ந்த விசாலாட்சியம்மாள் (வயது 65). இவர் கடந்த 10 வருடங்களாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் மன உளைச்சலுக்கு ஆளான விசாலாட்சியம்மாள், வீட்டின் மாடியில் உள்ள ஜன்னலில் புடவையால் தூக்குப்போட்டு கொண்டதாக தெரிகிறது.

அவருடைய மகன் சுரேஷ் மற்றும் அவரது மனைவி அங்கு வந்து பார்த்தபோது தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த விசாலாட்சியை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்து விட்டார். இது குறித்து அவருடைய மகன் சுரேஷ் (41) வடவணக்கம்பாடி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story