பெட்டி கடையில் மது விற்ற மூதாட்டி கைது


பெட்டி கடையில் மது விற்ற மூதாட்டி கைது
x

ஜோலார்பேட்டை அருகே பெட்டி கடையில் மது விற்ற மூதாட்டியை போலீசார் கைது செய்தனர்.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் போதைப்பொருள் விற்பனை குறித்து சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஜோலார்பேட்டை அடுத்த கட்டேரி ஊராட்சி பக்கிரித்தக்கா பகுதியில் உள்ள பெட்டிக்கடை ஒன்றில் அரசு டாஸ்மாக் மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பெட்டிக்கடையில் சோதனை நடத்தி விற்பனைக்கு மறைத்து வைத்திருந்த ஐந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் மது விற்றதாக அதே பகுதியை சேர்ந்த அனுமுத்து என்பவரின் மனைவி பவுனம்மாள் (வயது 71) என்பவரை போலீசார் கைது செய்தனர்.


Next Story