பேரையூர் அருகே வெடிபொருட்களுடன் முதியவர் கைது


பேரையூர் அருகே வெடிபொருட்களுடன் முதியவர் கைது
x

பேரையூர் அருகே வெடிபொருட்களுடன் முதியவர் கைது செய்யப்பட்டார்

மதுரை

பேரையூர்

சாப்டூர் வனத்துறையினர் தங்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பி.சுப்புலாபுரம்-நாகையாபுரம் சாலையில் உள்ள பாலத்தில் முதியவர் ஒருவர் மோட்டார்சைக்கிளில் சந்தேகத்துக்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்தார். அவரை வனத்துறையினர் விசாரித்த போது, முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார். இதையடுத்து அவரிடம் இருந்த பையை வனத்துறையினர் சோதனை செய்தனர். அதில் 31 சிறிய டப்பாக்களில் வெடிக்கும் தன்மை உடைய கரி மருந்து நிரப்பப்பட்ட வெடிபொருட்கள் இருந்தது. இதுகுறித்து வனத்துறையினர் முதியவரிடம் விசாரித்த போது, வனவிலங்குகளை வேட்டையாட கரி மருந்து நிரப்பப்பட்ட டப்பாக்களை கொண்டு வந்ததாக கூறியுள்ளார். விசாரணையில் அவர் பேரையூர் அருகே துள்ளுக்குட்டிநாயக்கனூரை சேர்ந்த மொக்கசாமி (வயது 75) என்பது தெரிய வந்தது. பின்னர் அவரை வனத்துறையினர் பேரையூர் போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மொக்கசாமியை கைது செய்தனர். அவரிடம் இருந்து மோட்டார்சைக்கிள், வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

1 More update

Next Story