முதியவர் விஷம் குடித்து தற்கொலை
சாயர்புரத்தில் பக்கத்து வீட்டை சேர்ந்த தம்பதி தாக்கியதால் மனமுடைந்த முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தொழிலாளியை கைது செய்தனர்.
சாயர்புரம்:
சாயர்புரத்தில் பக்கத்து வீட்டை சேர்ந்த தம்பதி தாக்கியதால் மனமுடைந்த முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து ெகாண்டார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் ஒருவரை கைது செய்தனர்.
முதியவர்
சாயர்புரம் அருகே உள்ள கட்டாலங்குளம் வடக்கு தெருவை சேர்ந்த பெருமாள் மகன் அந்தோணி (வயது 65). கூலி தொழிலாளி். இவருக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த மாடசாமி மகன் பெரும்படையான் குடும்பத்தினருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்துள்ளது. பெரும்படையான் தொழிலாளியாக இருந்து வருகிறார்.
சம்பவத்தன்று முன்விரோதத்தில் ஏற்பட்ட தகராறில் அந்தோணியை பெரும்படையானும், அவருடைய மனைவி சந்தனமாரியும் சேர்ந்து தாக்கினார்களாம்.
விஷம் குடித்து தற்கொலை
இதனால் மனமுடைந்த அந்தோணி வீட்டில் விஷம் குடித்த நிலையில், தனது மகன் முத்துக்குமாருக்கு செல்போன் மூலம் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். பதறிப்போன அவர் வீட்டிற்கு விரைந்து சென்றுள்ளார்.
ஆனால் அதற்குள் அந்தோணி பரிதாபமாக இறந்து விட்டாராம். இது தொடர்பாக அவரது மகன் முத்துக்குமார் அளித்த புகாரின் பேரில் சாயர்புரம் போலீசார் சம்பவ வீட்டுக்கு சென்று அந்தோணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தொழிலாளி கைது
இது தொடர்பாக விசாரணை நடத்திய சாயர்புரம் போலீசார் அந்தோணியை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து பெரும்படையானை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.