ரெயில் முன் பாய்ந்து முதியவர் தற்கொலை


ரெயில் முன் பாய்ந்து முதியவர் தற்கொலை
x

ரெயில் முன் பாய்ந்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.

தஞ்சாவூர்

கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை ரெயில் நிலையத்தில் இருந்து நேற்று காலை திருச்சி-சென்னை சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு சென்றது. அப்போது ரெயில் நிலையம் பகுதியில் சுற்றிக் கொண்டிருந்த 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் திடீரென அந்த ரெயில் முன் பாய்ந்தார். இதில் அவருடைய உடல் துண்டாகி சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். அவர் யார்? எந்த பகுதியைச் சேர்ந்தவர்? ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்வதற்கு காரணம் என்ன? என்பது குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story