ரெயில்முன் பாய்ந்து முதியவர் தற்கொலை


ரெயில்முன் பாய்ந்து முதியவர் தற்கொலை
x

ரெயில்முன் பாய்ந்து முதியவர் தற்கொலை செய்துகொண்டார்.

திருப்பத்தூர்

வாணியம்பாடியை அடுத்த திம்மாம்பேட்டை ஆவாரம் குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் அசோகன் (வயது 53). இவர் நேற்று வாணியம்பாடி ரெயில் நிலையம் அருகே ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் இருந்து காட்பாடி நோக்கி சென்ற ஏதோ ஒரு ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதில் அவர் தலை துண்டானநிலையில் பிணமாக கிடந்தார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் வழக்கப்பதிவு செய்து பிணத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story