கார் மோதி முதியவர் சாவு


கார் மோதி முதியவர் சாவு
x

கார் மோதி முதியவர் உயிரிழந்தார்.

பெரம்பலூர்

மங்களமேடு:

பெரம்பலூர் மாவட்டம், மங்களமேட்டை அடுத்துள்ள ரஞ்சன்குடியை சேர்ந்தவர் சேக் ஜாபர்(வயது 63). இவர் நேற்று முன்தினம் காலை தனது வீட்டிற்கு செல்வதற்காக முருக்கன்குடி கைகாட்டியில் இருந்து தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது திருச்சியில் இருந்து சென்னை நோக்கி கார், சேக்ஜாபர் மீது மோதியது. இதில் அவர் படுகாயமடைந்தார். இது பற்றி தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த மங்களமேடு போலீசார், சேக் ஜாபரை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story