சரக்கு ஆட்டோ மோதி முதியவர் சாவு


சரக்கு ஆட்டோ மோதி முதியவர் சாவு
x
தினத்தந்தி 6 Nov 2022 12:15 AM IST (Updated: 6 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

குத்தாலம் அருகே சரக்கு ஆட்டோ மோதி முதியவர் சாவு டிரைவர் கைது செய்யப்பட்டார்

மயிலாடுதுறை

குத்தாலம்:

மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் போலீஸ் சரகத்திற்குட்பட்ட கொடைவிளாகம் காலனி தெருவை சேர்ந்த அருள்தாஸ் (வயது60). நேற்றுமுன்தினம் இவர் தனது மோட்டார் சைக்கிளில் கொடைவிளாகம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அரும்பாக்கம் பெரிய மதகு என்ற இடத்தில் எதிரே வந்த சரக்கு ஆட்டோ எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் அருள்தாஸ் சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவல் அறிந்த பெரம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அருள்தாஸ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அருள்தாஸ் மகன் நெல்சன் தாஸ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரக்கு ஆட்டோவை ஓட்டி வந்த காரைக்கால் பகுதியை சேர்ந்த கருணாநிதி மகன் திலீப்குமார்(23) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story