அரசு பஸ் மோதி முதியவர் சாவு


அரசு பஸ் மோதி முதியவர் சாவு
x

அரசு பஸ் மோதி முதியவர் சாவு

நாகப்பட்டினம்

திருமருகல் அருகே அரசு பஸ் மோதி முதியவர் பரிதாபமாக இறந்தார்.

அரசு பஸ் மோதியது

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் போலகம் ஊராட்சி கூத்தப்பட்டாத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 65). இவர் சம்பவத்தன்று தெற்குலேரி அருகே சைக்கிளில் சாலையை கடந்தார். அப்போது கும்பகோணத்தில் இருந்து நாகப்பட்டித்திற்கு சென்ற அரசு பஸ் எதிர்பாராதவிதமாக சைக்கிள் மீது மோதியது.

முதியவர் சாவு

இதில் தலையில் பலத்த காயம் அடைந்த ராஜேந்திரனை அக்கம் பக்கத்தினர் மீட்டு உடனடியாக நாகப்பட்டினம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜேந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருக்கண்ணபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரசு பஸ் மோதி முதியவர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story