மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் சாவு


மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் சாவு
x

பூதலூரில் மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் உயிரிழந்தார்.

தஞ்சாவூர்

திருக்காட்டுப்பள்ளி:

பூதலூர் ஜீவா நகரை சோ்ந்தவர் உத்தராஜ்(வயது77). ஓய்வு பெற்ற மின்சார வாரிய ஊழியரான இவர் பூதலூர் மெயின் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக நாச்சியார்பட்டி நாடார் தெருவை சேர்ந்த ஜெயபால் (36) ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் உத்தராஜ் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த உத்தராஜ் பூதலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி உத்தராஜ் உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் பூதலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story