திண்டுக்கல் அருகே ரெயிலில் அடிபட்டு முதியவர் பலி


திண்டுக்கல் அருகே ரெயிலில் அடிபட்டு முதியவர் பலி
x
தினத்தந்தி 18 Sep 2023 9:00 PM GMT (Updated: 18 Sep 2023 9:00 PM GMT)

திண்டுக்கல் அருகே ரெயிலில் அடிபட்டு முதியவர் பலியானார்.

திண்டுக்கல்

திண்டுக்கல் அருகே முள்ளிப்பாடி பகுதியில் ரெயில் தண்டவாளத்தில் ஆண் பிணம் கிடப்பதாக, திண்டுக்கல் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். விசாரணையில், தண்டவாளத்தில் பிணமாக கிடந்தவர் செல்லமந்தாடியை சேர்ந்த பாண்டித்துரை (வயது 70) என்பது தெரியவந்தது.

மேலும் முள்ளிப்பாடியில் உள்ள உறவினரை பார்க்க தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்ற போது வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு அவர் இறந்தது தெரியவந்தது. இதையடுத்து பாண்டித்துரையின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story