வாகனம் மோதி முதியவர் சாவு


வாகனம் மோதி முதியவர் சாவு
x
தினத்தந்தி 31 March 2023 12:15 AM IST (Updated: 31 March 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

வாகனம் மோதி முதியவர் சாவு

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி-சாத்தூர் ரோட்டில் உள்ள பாரைப்பட்டி சோதனை சாவடி அருகில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த விபத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி 50 வயது மதிக்கத்தக்க முதியவர் பலத்த காயம் அடைந்தார். அந்த வழியாக சென்ற சிலர் அவரை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சையில் இருந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குபதிவு செய்து இறந்த நபர் யார்? அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் எது? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story