பூச்சி மருந்து கலந்த தண்ணீரை குடித்த முதியவர் சாவு


பூச்சி மருந்து கலந்த தண்ணீரை குடித்த முதியவர் சாவு
x
தினத்தந்தி 28 Jun 2023 1:58 AM IST (Updated: 28 Jun 2023 11:05 AM IST)
t-max-icont-min-icon

பூச்சி மருந்து கலந்த தண்ணீரை குடித்த முதியவர் உயிரிழந்தார்.

அரியலூர்

கீழப்பழுவூர்:

மயங்கிய நிலையில் கிடந்தார்

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வைப்பம் கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம்(வயது 78). இவர் ஆடு, மாடுகள் வளர்த்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று காலை அவர் வழக்கம்போல் ஆடு, மாடுகளை காட்டுக்குள் ஓட்டிச்சென்றார். ஆனால் அவர் மதியம் சாப்பிட வராததால் அவரது மகன் அவரை தேடிச்சென்றார். அப்போது மாணிக்கம் அங்கு மயங்கிய நிலையில் கிடந்தார். அவருக்கு மயக்கம் தெளிவித்து கேட்டபோது, பாட்டிலில் இருந்த தண்ணீரை குடித்ததாக கூறியுள்ளார்.

சாவு

இதையடுத்து அந்த பாட்டிலை நுகர்ந்து பார்த்தபோது, அதில் பூச்சி மருந்து வாடை வந்துள்ளது. இதனால் அவர் பூச்சி மருந்து(விஷம்) கலந்த தண்ணீரை குடித்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.

இதைத்தொடர்ந்து அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story