மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்த முதியவர் சாவு


மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்த முதியவர் சாவு
x

மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்த முதியவர் இறந்தார்.

கரூர்

நொய்யல் அருகே வேலம்பாளையம் கிரசர்மேடு பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 65). இவர் தனது மோட்டார் சைக்கிளில் நொய்யல் குறுக்குச்சாலையில் இருந்து பரமத்தி சாலையில் அதிவேகமாக சென்று கொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து ராமசாமி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவர் கோவையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி ராமசாமி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து ராமசாமியின் மகள் சுவாதி (21) கொடுத்த புகாரின்பேரில், வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story