மாடியில் இருந்து தவறி விழுந்த முதியவர் சாவு
மாடியில் இருந்து தவறி விழுந்த முதியவர் இறந்தார்.
திருச்சி
திருவெறும்பூர் அருகே உள்ள எழில்நகர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது74). இவர் துணி தேய்க்கும் கூலி தொழில் செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலையில் அவர் வீட்டின் மாடியில் நடைபயிற்சி செய்து கொண்டு இருந்தார். அப்போது, அவர் எதிர்பாராதவிதமாக மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த கிருஷ்ணமூர்த்தியை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story