மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் சாவு


மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் சாவு
x
தினத்தந்தி 11 Oct 2022 12:15 AM IST (Updated: 11 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சி


ரிஷிவந்தியம்,

ரிஷிவந்தியம் அடுத்த லா.கூடலூர் கிராமத்தை சேர்ந்தவர் அய்யாக்கண்ணு மகன் பெரியதம்பி (வயது 70). இவர் நேற்று காலை லாலாபேட்டையில் இருந்து லா.கூடலூரில் உள்ள தனது வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது, லா.கூடலூர் காலனியை சேர்ந்த குமார் மகன் ஆகாஷ் (19) என்பவர் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் பெரியதம்பியின் பின்புறம் எதிர்பாராவிதமாக மோதியது.

இதில், தலையில் படுகாயமடைந்த பெரியதம்பி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் பகண்டை கூட்டுரோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story