பாம்பு கடித்து முதியவர் சாவு


பாம்பு கடித்து முதியவர் சாவு
x

பாம்பு கடித்து முதியவர் பரிதாபமாக இறந்தார்.

கரூர்

தோகைமலை அருகே உள்ள தெலுங்கப்பட்டியை சேர்ந்தவர் அரசன் (வயது 65). இவர் கடந்த 22-ந்தேதி இயற்கை உபாதை கழிப்பதற்காக வீட்டின் பின்புறம் சென்றுள்ளார். அப்போது ஒரு பாம்பு அரசனை கடித்தது. இதனால் வலி தாங்க முடியாமல் தவித்த அவர் சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் அரசன் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தோகைமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story