குளத்தில் மூழ்கி முதியவர் பலி


குளத்தில் மூழ்கி முதியவர் பலி
x

குளத்தில் மூழ்கி முதியவர் உயிரிழந்தார்.

திருச்சி

கல்லக்குடி:

புள்ளம்பாடியை அடுத்த ஆலம்பாக்கம் கிராமத்தில் தெற்குத்தெருவை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி(வயது 80). இவர் தனது மனைவி அருள்மேரியுடன்(70) வசித்து வந்தார். ஆரோக்கியசாமி நேற்று மதியம் அருகில் உள்ள குளத்திற்கு குளிக்க சென்றார். அங்கு குளித்தபோது திடீரென மயக்கமடைந்து தண்ணீரில் மூழ்கினார். இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் அருள்மேரிக்கும், புள்ளம்பாடி தீயணைப்பு துறைக்கும் தகவல் கொடுத்துள்ளனர். அதன்பேரில் புள்ளம்பாடி தீயணைப்பு துறையினர் குளத்தில் அவரது உடலை தேடி மீட்டனர். இது குறித்து கல்லக்குடி போலீஸ் நிலையத்தில் அருள்மேரி கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story