கார் மோதி முதியவர் பலி
கார் மோதி முதியவர் பலியானார்.
பெரம்பலூர்
பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலம் அவ்வையார் தெருவை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 60). இவர் நேற்று காலை சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் நான்கு ரோடு அருகே சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக ராமேஸ்வரம் நோக்கி சென்று கொண்டிருந்த கார் கந்தசாமி மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கந்தசாமியின் உடலை கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டி வந்த மத்திய பிரதேசம் மாநிலம், தார் மாவட்டம், பத்னாவார் பகுதியை சேர்ந்த லக்கன்தாஸ் பெராகியிடம் (41) விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story