மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி
மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலியானார்.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே கல்லாங்குளம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கலியபெருமாள் (வயது 80), கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு இடையார் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் மது பாட்டிலை வாங்கிக் கொண்டு தனது வீட்டிற்கு நடந்து ெசன்று கொண்டு இருந்தார். அப்போது வெண்மான்கொண்டான் கிராமத்தை சேர்ந்த ராமர் (30) என்பவர் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக கலியபெருமாள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த கலியபெருமாளை அருகே இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் கலியபெருமாள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story