போதை தகராறில் முதியவருக்கு மதுபாட்டில் குத்து

அரக்கோணம் அருகே போதை தகராறில் முதியவருக்கு மதுபாட்டில் குத்து விழுந்தது.
ராணிப்பேட்டை
அரக்கோணத்தை அடுத்த சித்தேரி பகுதியை சேர்ந்தவர்கள் பழனி (வயது 60), சுப்பிரமணியன் (45). நண்பர்களாகிய இவர்கள் நேற்று முன்தினம் இரவு அங்குள்ள திரவுபதியம்மன் கோவில் அருகே மது அருந்தியுள்ளனர். அப்போது மது போதையில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு சுப்பிரமணியன் மதுபாட்டிலால் பழனியை குத்தியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த பழனிக்கு அரக்கோணம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இது குறித்து அரக்கோணம் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story






