முதியவர் கல்லால் தாக்கி கொலை

கோவையில் சாலையோரம் படுத்து தூங்கிய முதியவர் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டார்.
கோவை
கோவையில் சாலையோரம் படுத்து தூங்கிய முதியவர் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டார்.
முதியவர் கொலை
கோவை மேட்டுபாளையம்-கவுலிப்ரவுன் ரோடு சந்திப்பில் ஒரு கடை முன்பு தலையில் படுகாயத்துடன் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.
இது குறித்த தகவலின் பேரில் ஆர்.எஸ்.புரம் போலீசார் விரைந்து சென்று முதியவரின் உடலை கைப்பற்றி கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
இதில், யாரோ மர்ம நபர் ஒருவர் முதியவரின் தலையில் கல்லால் தாக்கி கொலை செய்தது தெரிய வந்தது.ஆனால் கொலையான முதியவர் யார்?. அவரை கொலை செய்தது யார்?. என்பது குறித்து போலீசார் விசாரனை நடத்தினர்.
போலீசார் விசாரணை
விசாரணையில் கொலை செய்யப்பட்ட முதியவர் அந்த பகுதியில் பிச்சை எடுத்து விட்டு அங்கேயே படுத்து கொள்பவர் என்பது தெரிய வந்தது. ஆனால் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை.
இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.






