பள்ளி மாணவிக்கு ஆபாச படம் காண்பித்த முதியவர்
தாத்தா வீட்டில் டி.வி. பார்க்க போன... பள்ளி மாணவிக்கு ஆபாச படம் போட்டு காண்பித்த சம்பவம் அரங்கேறி உள்ளது. மாணவி முதியவரான தாத்தா வீட்டில், தனது தாத்தாவுடன் சென்று டி.வி. பார்ப்பதும், பேசுவதும் வழக்கம். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற சம்பவம் நடந்து இருக்கிறது.
பொள்ளாச்சி,
தாத்தா வீட்டில் டி.வி. பார்க்க போன... பள்ளி மாணவிக்கு ஆபாச படம் போட்டு காண்பித்த சம்பவம் அரங்கேறி உள்ளது. மாணவி முதியவரான தாத்தா வீட்டில், தனது தாத்தாவுடன் சென்று டி.வி. பார்ப்பதும், பேசுவதும் வழக்கம். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற சம்பவம் நடந்து இருக்கிறது.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
சிறுமிக்கு ஆபாச படம்
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆனைமலை பகுதியில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த தம்பதிக்கு குழந்தை இல்லை. இதனால் உறவினரின் குழந்தையை வளர்த்து வருகின்றனர். 10 வயதான அந்த சிறுமி ஒரு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறாள். இந்தநிலையில் சிறுமியின் தாத்தாவும், அதே பகுதியை சேர்ந்த திருமண புரோக்கரான பழனிசாமி (65) என்பவரும் அவரது வீட்டில் அமர்ந்து டி.வி.யில் படம் பார்ப்பது வழக்கம்.
இதனால் தனது தாத்தோவோடு சிறுமி அடிக்கடி பழனிசாமி வீட்டிற்கு சென்று டி.வி. பார்த்து வந்தாள். சம்பவத்தன்று சிறுமியின் தாத்தா வீட்டை விட்டு வெளியே சென்று உள்ளார். அப்போது அந்த சிறுமி தனியாக பழனிசாமி வீட்டிற்கு டி.வி. பார்க்க சென்றதாக தெரிகிறது. வீட்டில் யாரும் இல்லாததை பயன்படுத்தி கொண்ட அவர், சிறுமிக்கு டி.வி.யில் ஆபாச படத்தை போட்டு காண்பித்ததாக கூறப்படுகிறது.
போலீசார் விழிப்புணர்வு
மேலும் பழனிசாமி அடிக்கடி சிறுமி படிக்கும் பள்ளி அருகில் சென்று மற்ற சிறுமிகளிடம் தகாத முறையில் பேசி வந்ததாக தெரிகிறது. இந்தநிலையில் பள்ளியில் போலீசார் போக்சோ சட்டம் குறித்து மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதையடுத்து 5-ம் வகுப்பு மாணவி உள்பட சில மாணவிகள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் பழனிசாமி தகாத வார்த்தைகளை பேசி தொல்லை கொடுத்து வந்ததாகவும், ஒரு மாணவிக்கு டி.வி.யில் ஆபாச படம் காண்பித்தாகவும் புகார் கூறினர்.
உடனடியாக தலைமை ஆசிரியர் இதுகுறித்து கோவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் பள்ளிக்கு நேரில் வந்து மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பழனிசாமி 5-ம் வகுப்பு மாணவிக்கு வீட்டில் ஆபாச படம் போட்டு காண்பித்ததும், மற்ற மாணவிகளிடம் தவறாக பேசியதும் தெரியவந்தது.
போக்சோவில் கைது
இதுகுறித்து அலுவலர்கள் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பழனிசாமியை கைது செய்தனர். தாத்தா என்ற எண்ணத்தில் மாணவி வீட்டிற்கு டி.வி. பார்க்க சென்று வந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பள்ளிக்கு சென்று போலீசார் ஏற்படுத்திய விழிப்புணர்வால், மாணவிகள் புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது.