ஆதிச்சநல்லூரில் மண்டை ஓடுகளுடன் முதுமக்கள் தாழி கண்டெடுப்பு..!


ஆதிச்சநல்லூரில் மண்டை ஓடுகளுடன் முதுமக்கள் தாழி கண்டெடுப்பு..!
x

கோப்புப்படம்

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் நடந்து வரும் அகழ்வாய்வில் 2 மண்டை ஓடுகள் கொண்ட முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீவைகுண்டம்,

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூர் பண்டைய தமிழர்களின் நாகரிக தொட்டிலாக விளங்குகிறது. இங்குள்ள பரும்பு பகுதியில் பல்வேறு கட்டங்களாக நடந்த அகழாய்வில் ஏராளமான முதுமக்கள் தாழிகள், மண்பாண்ட பொருட்கள், தங்க ஆபரணங்கள், இரும்பாலான ஆயுதங்கள், வெண்கல பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.

அங்கு மத்திய அரசின் சார்பில், உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் மற்றும் 'சைட் மியூசியம்' அமைக்கப்பட உள்ளது. இதற்காக அங்கு அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை ஆவணப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், அகழ்வாய்வின் போது 2 மண்டை ஓடுகளுடன் முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது குறித்து பேசிய ஆய்வாளர்கள், மண்டை ஓடுகள் கணவன் - மனைவியா? அல்லது தாய் - சேயா? என ஆய்வில் தெரியவரும் என்று கூறினர்.

மேலும் அகழாய்வில் கிடைத்த பொருட்கள் அனைத்தும் விரைவில் அமையவுள்ள அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story