மூதாட்டி தூக்குப்போட்டு தற்கொலை


மூதாட்டி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 22 Nov 2022 6:45 PM GMT (Updated: 22 Nov 2022 6:46 PM GMT)

மூதாட்டி தூக்குப்போட்டு தற்கொலை

கோயம்புத்தூர்

துடியலூர்

நரசிம்மநாயக்கன்பாளையத்தில் மூதாட்டி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆற்றில் குதித்து இறந்த கணவர் உடலை போலீசாரே அடக்கம் செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

வயதான தம்பதி

கோவையை அடுத்த துடியலூர் நரசிம்மநாயக்கன்பாளையம் அக்கையா நாயுடு வீதியை சேர்ந்தவர் குருந்தாசலம் (வயது85). இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி லட்சுமி (80).

இவர்களுடைய மகள் நாகரத்தி னம். அவருடைய கணவர் ஆறுமுகம் ஏற்கனவே இறந்து விட்டார். இதனால் நாகரத்தினம் தனது குழந்தைகளுடன் துடியலூர் அம்பிகா நகரில் வசித்து வருகிறார்.

முதியோர் உதவித்தொகை

குருந்தாசலத்தின் மகன் சில ஆண்டுகளுக்கு முன்பு பெரியநாயக் கன்பாளையத்தில் உள்ள நீச்சல் குளத்தில் தண்ணீர் மூழ்கி இறந்து விட்டார். இதனால் வீட்டில் தனியாக வசித்த குருந்தாச்சலம், லட்சுமி ஆகியோர் தமிழக அரசின் முதியோர் உதவித்தொகை மூலம் வாழ்க்கை நடத்தி வந்தனர்.

மேலும் அவர்களுடைய மகள் நாகரத்தினமும் பெற்றோரை பார்த்து உதவிகள் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் லட்சுமி அம்பிகாநகரில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்று ஒருவாரம் தங்கி இருந்து விட்டு கடந்த 14-ந் தேதி நரசிம்மநாயக்கன்பாளையம் வீட்டிற்கு வந்தார்.

தூக்குப்போட்டு தற்கொலை

அதன் பிறகு பெற்றோரிடம் இருந்து நாகரத்தினத்துக்கு எந்தவித தொடர்பும் இன்றி இருந்தது. இதற்கிடையே குருந்தாசலத்தின் வீட்டில் விளக்கும் அணைக்கப்படாமல் தொடர்ந்து எரிந்து கொண்டு இருப்பதாக நாகரத்தினத்துக்கு அக்கம்பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர்.

உடனே அவர் நரசிம்ம நாயக்கன்பாளையம் வீட்டிற்கு வந்தார். அங்கு கதவு சாத்தப்பட்டு இருந்தது. இதையடுத்து அவர் கதவை திறந்து வீட்டிற்குள் சென்று பார்த்த போது லட்சுமி தூக்கில் பிணமாக தொங்கி கொண்டு இருந்தார். அவருடைய உடல் அழுகிய நிலையில் இருந்தது.

ஆற்றில் பிணம்

அதை பார்த்து நாகரத்தினம் கதறி அழுதார். பின்னர் அவர் தனது தந்தையை தேடினார். ஆனால் அவரை எங்கும் காண வில்லை. இது குறித்த புகாரின் பேரில் பெரியநாயக்கன்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

இதையடுத்து குருந்தாசலத்தை காண வில்லை என்று புகார் செய் யப்பட்டது. அதன் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்ட னர். அப்போது மேட்டுப்பாளையம் நெல்லித்துறை பாலம் அருகில் பவானி ஆற்றில் குதித்து முதியவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

போலீசாரே அடக்கம் செய்தனர்

அவருடைய உடலை மீட்டு போலீசார் மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் வைத்து இருந்தனர். ஆனால், அவரு டைய உடலை கேட்டு யாரும் வராத நிலையில் அனாதை பிணம் என்று கருதி மேட்டுப்பாளையம் போலீசாரே அடக்கம் செய்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து குருந்தாசலத்தின் புகைப்படம் மேட்டுப்பாளையம் போலீசாருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதை அவர்கள் சரி பார்த்தனர். இதற்கிடையே போலீசார் அடக்கம் செய்தவரின் அடையாளங்களை நாகரத்தினம் பார்த்த போது அது தனது தந்தை குருந்தாசலம் என்பதை உறுதி செய்து கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

பாரமாக இருக்க விரும்ப வில்லை

வயதான நிலையில் யாருக்கும் பாரமாக இருக்க கூடாது என்று கருதி குருந்தாசலமும், லட்சுமியும் தற்கொலை செய்து முடிவு செய்து உள்ளனர். அதன்படி லட்சுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்ததை பார்த்த பிறகு, பவானி ஆற்றில் குதித்து குருந்தாசலம் தற்கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story