கிணற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை


கிணற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை
x
தினத்தந்தி 12 March 2023 12:15 AM IST (Updated: 12 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

உடல்நிலை சரியில்லாததால் கிணற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை செய்துகொண்டார்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி அருகே உள்ள ராமநாதபுரத்தை சேர்ந்தவர் பரமசிவம். இவரது மனைவி வள்ளியம்மாள் (வயது 65). இவர் ஜலத்தூர் பிரிவில் ஒரு தனியார் தோட்டத்தில் தங்கி வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் அவர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் காரணமாக அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில் தோட்டத்து வீட்டில் இருந்த அவரை நீண்ட நேரமாக காணவில்லை. அந்த பகுதியில் தேடி பார்த்த போது, தோட்டத்து கிணற்றில் பிணமாக கிடப்பது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து கிணற்றில் இருந்து அவரது உடலை மீட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story