கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி சாவு
கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி சாவு உயிரிழந்தார்.
திருப்புவனம்,
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் பகுதியை சேர்ந்தவர் பேச்சியம்மாள் (வயது 80). இவர் சிவகங்கை மாவட்டம் கீழடி அருகே உள்ள தனியார் செங்கல் சூளையில் தனது மகளுடன் தங்கி வேலை பார்த்து வந்தார். இவருக்கு கண் பார்வை குறைவாக இருந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரை மகள் பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் நேற்று ஆடு மேய்க்க சென்றவர்கள் கீழடி அருகே உள்ள ஒரு கிணற்றில் மூதாட்டி பேச்சியம்மாள் பிணமாக கிடப்பதாக திருப்புவனம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மூதாட்டி கிணற்றில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.