சேலையில் தீப்பற்றி மூதாட்டி சாவு


சேலையில் தீப்பற்றி மூதாட்டி சாவு
x
தினத்தந்தி 3 March 2023 12:15 AM IST (Updated: 3 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சேலையில் தீப்பற்றி மூதாட்டி இறந்தார்.

சிவகங்கை

காரைக்குடி

காரைக்குடி அருகே கொத்தமங்கலம் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது தாயார் ஆராயி (வயது 91). இவர் குடிசையில் வசித்து வந்தார். வயது முதிர்வின் காரணமாக ஆராயி கட்டிலில் படுத்த நிலையிலேயே இருந்தார். சம்பவத்தன்று இரவு சுப்பிரமணியன் மனைவி சரோஜா வழக்கம் போல் மாமியாருக்கு உணவு கொடுத்துவிட்டு வெளிச்சத்திற்காக மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்துவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இரவு தூங்கும்முன் ஆராயி மெழுகுவர்த்தியை அணைக்க முயன்றதாகவும், அப்போது எதிர்பாராத விதமாக அவரது சேலையில் தீப்பிடித்தாகவும் கூறப்படுகிறது. மேலும் குடிசையிலும் தீப்பிடித்து எரிந்தது. இதில் உடல் கருகிய ஆராயி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து செட்டிநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story