மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வாகனம் மோதி மூதாட்டி பலி
மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வாகனம் மோதி மூதாட்டி உயிரிழந்தார்.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, பெருமத்தூரை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மனைவி லட்சுமி (வயது 61). இவரை நேற்று முன்தினம் பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து கவுல்பாளையத்துக்கு அவருடைய பேரன் மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார்.
பெரம்பலூர் பழைய வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே சென்றபோது பின்னால் வந்த சரக்கு வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்ததில் படுகாயமடைந்த லட்சுமி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது பேரனுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக, விபத்தை ஏற்படுத்திய சரக்கு வாகன டிரைவர் திருச்சி சுப்பிரமணியபுரம் வள்ளுவர் தெருவை சேர்ந்த ஷாஜகான்(44) மீது பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story