மின்சாரம் தாக்கி மூதாட்டி சாவு


மின்சாரம் தாக்கி மூதாட்டி சாவு
x

சீர்காழியில் திருடர்களை பிடிக்க மின் இணைப்பு கொடுத்திருந்த பீரோவை திறந்த போது மின்சாரம் தாக்கி மூதாட்டி உயிரிழந்தார்.

மயிலாடுதுறை

சீர்காழி:

சீர்காழியில் திருடர்களை பிடிக்க மின் இணைப்பு கொடுத்திருந்த பீரோவை திறந்த போது மின்சாரம் தாக்கி மூதாட்டி உயிரிழந்தார்.

ஓய்வு பெற்ற தூய்மை பணியாளர்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஈசானிய தெருவை சேர்ந்தவர் அன்பழகி (வயது 68). இவர் சீர்காழி நகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்.

இவரது கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இதனால் அவர் ஈசானிய தெருவில் உள்ள தனது வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

பொருட்கள் திருட்டு

அன்பழகி வீட்டில் அடிக்கடி பொருட்கள் திருட்டு போனதாக தெரிகிறது. திருடர்களை பிடிக்க அவர் தனது வீட்டில் உள்ள சுவிட்ச் போர்டில் இருந்து மின்வயரை பீரோ மற்றும் கதவின் கைப்பிடியில் கட்டி அதற்கு மின் இணைப்பு கொடுத்துள்ளார்.

அவர் வெளியே செல்லும் போது இந்த மின்வயருக்கு மின் இணைப்பு கொடுத்து விட்டு செல்வார். வீட்டுக்கு வந்தவுடன் மின் இணைப்பை துண்டித்து விடுவார்.

மின்சாரம் தாக்கி மூதாட்டி சாவு

இந்த நிலையில் நேற்று காலை அன்பழகி ஞாபகமறதியால் மின் இணைப்பை துண்டிக்காமல் பீரோவை திறந்தார். அப்போது அவரை மின்சாரம் தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து அவரது சகோதரர் மாயவன் சீர்காழி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அன்பழகி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சோகம்

தனது வீட்டில் பொருட்களை திருடும் திருடர்களை பிடிக்க மின் இணைப்பு கொடுத்திருந்த பீரோவை ஞாபக மறதியால் திறந்ததால் மின்சாரம் தாக்கி மூதாட்டி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story