பறக்கை அருகே தீவிபத்தில் காயம் அடைந்த மூதாட்டி சாவு
தீவிபத்தில் காயம் அடைந்த மூதாட்டி இறந்தார்.
கன்னியாகுமரி
மேலகிருஷ்ணன்புதூர்:
பறக்கை அருகே உள்ள சி.டி.எம்.புரத்தை சேர்ந்தவர் சொர்ணம் (வயது 80). இவர் சம்பவத்தன்று வீட்டில் டீ போட்டுக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது சேலையில் தீப்பற்றியது. தீ உடல் முழுவதும் பரவியதால் வலி தாங்க முடியாமல் அலறினார். அவரது சத்தம் கேட்டு உறவினர்கள் ஓட்டி வந்து தீயை அணைத்தனர். உடனே, அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சொர்ணம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சொர்ணத்தின் மகன் சந்தனகுமார் கொடுத்த புகாரின் பேரில் சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story