தண்ணீர் லாரி மோதி மூதாட்டி பலி


தண்ணீர் லாரி மோதி மூதாட்டி பலி
x
தினத்தந்தி 10 May 2023 12:15 AM IST (Updated: 10 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தண்ணீர் லாரி மோதி மூதாட்டி பலியானார்.

ராமநாதபுரம்

கீழக்கரை,

கீழக்கரை அருகே உள்ள நத்தம் கிராமத்தை சேர்ந்த முகமது இபுராகிம் மனைவி சாரா பீவி (வயது 70). சென்னையில் இருந்து மகள் அனுப்பிய பார்சலை வாங்க கீழக்கரைக்கு வந்தார். தண்ணீர் லாரியை பின்புறமாக டிரைவர் ஓட்டி வந்தபோது எதிர்பாராதவிதமாக அவ்வழியாக சென்ற சாரா பீவி மீது லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.


Next Story