மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி படுகாயம்


மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி படுகாயம்
x
தினத்தந்தி 23 Nov 2022 7:00 PM GMT (Updated: 23 Nov 2022 7:01 PM GMT)

போடி அருகே மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி படுகாயம் அடைந்தார்.

தேனி

போடி அருகே உள்ள துரைராஜபுரம் காலனியை சேர்ந்தவர் வீரம்மாள் (வயது 60). இவர் நேற்று முன்தினம் இரவு போடி-தேனி சாலையை கடக்க முயன்றார். அப்போது போடியை சேர்ந்த அருண்மூர்த்தி (38) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் வீரம்மாள் படுகாயம் அடைந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக போடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது குறித்து போடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story