ஒலிம்பியாட் சதுரங்க போட்டித்தேர்வு பரிசளிப்பு விழா


ஒலிம்பியாட் சதுரங்க போட்டித்தேர்வு பரிசளிப்பு விழா
x

திருப்பத்தூரில் ஒலிம்பியாட் சதுரங்க போட்டித்தேர்வு பரிசளிப்பு விழா நடந்தது.

திருப்பத்தூர்


மாமல்லபுரத்தில் அடுத்த மாதம் (ஜூலை) 28- தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 10-ந் தேதி வரை 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. இதில் 189 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்று விளையாடுகின்றனர். இந்த போட்டியை நேரில் காணும் வாய்ப்பைப் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு வீரர் வீராங்கனைக்கு வழங்கப்படுகிறது. போட்டியை காண செல்லும் வீரர்களை தேர்வு செய்யவும் மற்றும் மாவட்ட அளவில் சிறந்த வீரர்களை தேர்ந்தெடுக்கும் வகையில் திருப்பத்தூர் மாவட்ட செஸ் சங்கம் சார்பில் திருப்பத்தூர் ஸ்ரீ அமிர்தா மேல்நிலைப்பள்ளியில் தேர்வு போட்டி நடைபெற்றது.

44 செஸ் ஒலிம்பியாட் போட்டியின் முன்னோட்டமாக திருப்பத்தூர் 15 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவ- மாணவிகளுக்கு 2 நாட்கள் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் 186 பேர் பங்கேற்றனர்.இதில் சிறப்பாக விளையாடிய திருப்பத்தூர் டான் போஸ்கோ சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவி ஸ்வேதா மற்றும் ஆம்பூர் விஸ்டம் பார்க் பள்ளியை சேர்ந்த முகமது அனஸ் ஹிசாம் ஆகியோர் முதலிடம் பிடித்தனர். மேலும் போட்டியில் பங்கேற்று முதல் 25 இடங்களை பெற்ற ஆண்கள் மற்றும் 25 இடங்களைப் பெற்ற பெண்கள் ஆகியோருக்கு பரிசு கோப்பையும் கலந்து கொண்ட அனைத்து மாணவ- மாணவியருக்கும் பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

மேலும் முதலிடம் பெற்ற இருவரும் ஒலிம்பியாட் போட்டியை காண தேர்வு செய்யப்பட்டனர். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக திருப்பத்தூர் மாவட்ட சதுரங்க கழகத் தலைவர் ஸ்ரீதரன், செயலாளர் சந்திரசேகரன், பொறுப்பாளர்கள் ஆனந்த் மற்றும் வில்லியம்ஸ் ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்கள்.


Next Story