நங்கவள்ளியில் ஓம்காளியம்மன் கோவில் திருவிழா- தீ மிதித்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
நங்கவள்ளியில் ஓம்காளியம்மன் கோவில் திருவிழாவையொட்டி தீ மிதித்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
சேலம்
மேச்சேரி:
நங்கவள்ளி ஓம் காளியம்மன் கோவில் திருவிழா சக்தி அழைத்தலுடன் தொடங்கியது. நேற்று முன்தினம் காலையில் பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். மேலும் பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். இதன் தொடர்ச்சியாக நேற்று காலையில் மஞ்சள் நீராட்டம் நடந்தது. மாலையில் தீ மிதி விழா நடைபெற்றது. இதில் ஆண், பெண் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு தீ மிதித்தனர். பக்தர்கள் சிலர் தங்கள் கைக்குழந்தைகளை தூக்கி கொண்டு தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவில் கிராமிய கலை நிகழ்ச்சி நடந்தது. விழாவின் நிறைவாக இன்று (வெள்ளிக்கிழமை) மாலை வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி நடக்கிறது.
Next Story