ஆம்னி பஸ் டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை
ஏரலில் ஆம்னி பஸ் டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஏரல்:
ஏரலில் குடும்ப பிரச்சினையில் மனைவி கோபித்து கொண்டு தந்தை வீட்டுக்கு சென்றதால் மனமுடைந்த ஆம்னிபஸ் டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆம்னி பஸ் டிரைவர்
ஏரல் சூசையப்பர் கோவில் தெருவை சேர்ந்தவர் பாக்யராஜ் இவரது மகன் பாஸ்கர் (வயது 40). இவர் ஆம்னி பஸ் டிரைவராக உள்ளார். இவரது மனைவி ராமஜெயம் இவர்களுக்கு அஜிதா (வயது 16), சுஜிதா (வயது 15) என்ற இரண்டு மகளும், ரஞ்சன் (வயது 12) என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில், கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 21-ந் தேதி பாஸ்கர் வீட்டில் உள்ள ஆதார்கார்டு, போட்டோ ஆகியவற்றை திடீரென்று கிழிந்து எரிந்துள்ளார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
தூக்கு போட்டு தற்கொலை
இதில் மனமுடைந்த ராமஜெயம் தனது குழந்தைகளுடன் வீட்டிலிருந்து வெளியேறி, மேலமங்களக்குறிச்சியில் உள்ள தனது தந்தை வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று முன்தினம் மாலையில் பாஸ்கர் செல்போனில் மனைவியை தொடர்பு கொண்டு வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார். குழந்தைகளுடன் வீட்டுக்கு வரவில்லை என்றால் நான் இறந்து விடுவேன் என்று பாஸ்கர் கூறியுள்ளார். இதை தொடர்ந்து ராமஜெயம் குழந்தைகளுடன் ஏரல் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டிற்குள் பேனில் சேலையால் தூக்கு போட்டு பிணமாக தொங்கியுள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரும், குழந்தைகளும் கதறி அழுதுள்ளனர்.
போலீசார் விசாரணை
இது குறித்து தகவல் அறிந்த ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் மேரி ஜெமீதா சம்பவ வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினார். மேலும் பாஸ்கர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இந்த சம்பவம் குறித்து ஏரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.