ஆம்னி பஸ் கட்டணம்: "ஏழை, எளிய மக்களுக்கு பாதிப்பு இல்லை" - அமைச்சர் சிவசங்கர்


ஆம்னி பஸ் கட்டணம்: ஏழை, எளிய மக்களுக்கு பாதிப்பு இல்லை - அமைச்சர் சிவசங்கர்
x

ஆம்னி பஸ்சில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படுவது இல்லை என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை எழிலகத்தில் உள்ள போக்குவரத்துத் துறை ஆணையர் அலுவலகத்தில் அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

அரசு பஸ்கள் மக்களின் சேவைக்காக இயங்குவது. ஆனால் ஆம்னி பஸ்கள் அப்படி அல்ல. அவர்களும் ஒரு தொழில் செய்கிறார்கள். அரசு பஸ் கட்டணத்துடன், ஆம்னி பஸ் கட்டணத்தை ஒப்பிடுவது தவறான கண்ணோட்டம்.

பல்வேறு வித பஸ்களுக்கு வெவ்வேறு கட்டணம் நிர்ணயிக்க வேண்டிருப்பதாக ஆம்னி பஸ் உரிமையாளர்கள் கூறுகின்றனர். கட்டணத்தை குறைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதால் ஓரிரு நாட்களில் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் மக்களுக்கு பாதிப்பு வராத வகையில்தான் கட்டணம் நிர்ணயம் செய்து விரைவில் அறிவிப்பார்கள்.

ஆம்னி பஸ்சில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படுவது இல்லை. அரசு பஸ்களில் பயணிக்காதவர்கள் ஆம்னி பஸ் கட்டணத்தை தெரிந்து கொண்டே முன்பதிவு செய்து செல்கின்றனர். பண்டிகை காலங்களில் தனியார் பஸ்கள் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story