சாலையின் தடுப்பு கட்டையில் மோதிய ஆம்னி பஸ்
விராலிமலை அருகே சாலையின் தடுப்பு கட்டையில் மோதி ஆம்னி பஸ் விபத்துக்குள்ளானது.
புதுக்கோட்டை
மதுரையிலிருந்து தனியார் ஆம்னி பஸ் ஒன்று நேற்று முன்தினம் நள்ளிரவு 50 பயணிகளுடன் திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது. விராலிமலையை அடுத்த ராமகவுண்டம்பட்டி பிரிவு சாலை அருகே மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது முன்னால் சென்ற கார் டிரைவர் திடீரென பிரேக் போட்டதால் கார் மீது மோதாமல் இருப்பதற்காக ஆம்னி பஸ் டிரைவர் பஸ்சை திருப்பியுள்ளார். இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பஸ் எதிர்பாராதவிதமாக சாலையின் நடுவே இருந்த தடுப்புக்கட்டையில் மோதி நின்றது. இதில் ஆம்னி பஸ்சின் முன்பகுதி சேதமடைந்தது. பயணிகள் அனைவரும் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த விபத்தால் மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story