வால்பாறையில் 28-ந்தேதி நடக்கிறது:மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் குறித்து விழிப்புணா்வு பேரணி


வால்பாறையில் 28-ந்தேதி நடக்கிறது:மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் குறித்து விழிப்புணா்வு பேரணி
x
தினத்தந்தி 25 Feb 2023 12:15 AM IST (Updated: 25 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வால்பாறையில் 28-ந்தேதி நடக்கிறது: மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் குறித்து விழிப்புணா்வு பேரணி

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுவதை குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவின் பேரில் பள்ளி மாணவ மாணவிகள் விழிப்புணர்வு பேரணி நடத்தினார்கள்.

வருகிற 28-ந்தேதி வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணிவரை இந்த மருத்துவ முகாம் நடைபெறுகிறது. இந்த மருத்துவ முகாமில் மருத்துவ பரிசோதனை மற்றும் தேசிய அடையாள அட்டை வழங்கப்படுகிறது. தேசிய அடையாள அட்டை புதுப்பித்தும் தரப்படுகிறது. உதவி தொகை பெறுவதற்காக பதிவும் மேற்கொள்ளப்படுகிறது. மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச உபகரணங்கள் வழங்கப்படுகிறது. .முகாமிற்கு வரும் போது அடையாள அட்டை கலர் ஜெராக்ஸ் நகல் -2, பிறப்பு சான்றிதழ், 5பாஸ்போர்ட் போட்டோ, குடும்ப அட்டை, ஆதார் அட்டை நகல் எடுத்து வரவேண்டும். 18 வயதுக்குள் இருப்பவர்கள் இந்த மருத்துவ முகாமில் கலந்து கொள்ளலாம் என்று விழிப்புணர்வு பேரணியின் போது கோஷங்களை எழுப்பியும் துண்டு பிரசுரங்களை வழங்கியும் அனைவருக்கும் கல்வி இயக்க ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். முகாமிற்கான ஏற்பாடுகளை அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வளமைய மேற்பார்வையாளர் ராஜாராம் தலைமையில் ஆசிரியர் பயிற்றுனர்கள் செய்திருந்தனர்.அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலிருந்து ஸ்டேன்மோர் சந்திப்பு வரை பேரணி நடைபெற்றது.


Next Story