குடும்ப பிரச்சினையில் விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை
வீரபாண்டி அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
வீரபாண்டி அருகே உள்ள தர்மாபுரி வடக்குத்தெருவை சேர்ந்தவர் கவுதமி (வயது 27). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளியான கிருஷ்ணசாமி என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் கவுதமி கவலையில் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த 1-ந் தேதி அதே பகுதியில் உள்ள தோட்டத்தில் கவுதமி வேலை செய்து கொண்டிருந்தார். அங்கு அவரது கணவர் கிருஷ்ணசாமி வந்தார். அவர், கவுதமியிடம் மீண்டும் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த கவுதமி தோட்டத்தில் இருந்த பூச்சி மருந்தை (விஷம்) எடுத்து குடித்தார்.
இதைக்கண்ட கிருஷ்ணசாமியும் அவரிடம் இருந்து மருந்தை பிடுங்கி குடித்தார். இதில் கணவன், மனைவி இருவரும் அங்கேயே மயங்கி விழுந்தனர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் சிகிச்சை பெற்ற கிருஷ்ணசாமி குணமாகி வீட்டுக்கு திரும்பினார். அங்கு கவுதமி சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.