மோட்டார் சைக்கிள் மீதுகார் மோதி 3 பேர் படுகாயம்
தேவதானப்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
தேவதானப்பட்டி அருகே உள்ள எருமலை நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ஆசைத்தம்பி (வயது 32). பெயிண்டர். நேற்று முன்தினம் இவர், வேலை சம்பந்தமாக எருமலைநாயக்கன்பட்டியில் இருந்து மோட்டார் சைக்கிளில் தேனிக்கு சென்று கொண்டிருந்தார். அவருடன் அதே ஊரை சேர்ந்த பெருமாள் (30), டி.வாடிப்பட்டியைச் சேர்ந்த கணேசன் (28) ஆகியோரும் சென்றனர். மோட்டார் சைக்கிளை ஆசைத்தம்பி ஓட்டினார். பெரியகுளம்-வத்தலக்குண்டு சாலையில் சில்வார்பட்டி பிரிவு அருகே மோட்டார் சைக்கிள் சென்றது. அப்போது தேனியில் இருந்து வத்தலக்குண்டு நோக்கி சென்ற கார், எதிர்பாராதவிதமாக இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தினர் அவா்களை மீட்டு சிகிச்சைக்காக பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.