மோட்டார் சைக்கிள் மீதுகார் மோதி டிரைவர் படுகாயம்
பெரியகுளம் அருகே மோட்டார்சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் டிரைவர் படுகாயம் அடைந்தார்.
தேனி
பெரியகுளம் அருகே உள்ள ஸ்டேட் பேங்க் காலனியை சேர்ந்தவர் சலீம்ராஜா (வயது 47). கார் டிரைவர். நேற்று முன்தினம் இவர், திண்டுக்கல்-பெரியகுளம் சாலையில் ஸ்டேட் பேங்க் காலனி பிரிவில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது வளைவில் திரும்பிய போது, அந்த வழியாக வந்த கார், இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சலீம்ராஜாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து பெரியகுளம் போலீசார் திண்டுக்கல் பேகம்பூரை சேர்ந்த கார் டிரைவரான சந்தோஷ் ராஜா (28) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story