சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிட்ட வாலிபர் கைது


சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிட்ட வாலிபர் கைது
x

சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

நெல்லை அருகே உள்ள முன்னீர்பள்ளம் தாமரைச்செல்வி பகுதியை சேர்ந்தவர் அழகுபாண்டி (வயது 20). இவர் இருதரப்பினரிடையே பிரச்சினையை தூண்டும் வகையில் சமூக வலைதளத்தில் வீடியோ பதிவு செய்து இருந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த முன்னீர்பள்ளம் போலீசார் அழகுபாண்டி மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இதுபோன்று பொதுஅமைதியை சீர்குலைக்கும் வகையில் சமூக வலைதளத்தில் பதிவு செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Next Story